ஜன.9ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்.. ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜன.9ந்தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சென்னை, டிச-21

இதுகுறித்து அதிமுக தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்ப்டடுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 9-1-2021 சனிக்கிழமை காலை 8:50 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் திரு.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

உறுப்பினர்கள் அனைவரும் covid-19 பரிசோதனை செய்து அதனை சான்றிதழுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித் திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்த முகக்கவசம் அணிந்து தங்களுக்குரிய அழைப் பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“அதிமுகவின் கொள்கைகளையும், ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவைகளையும், நிறுவனர் எம்.ஜி.ஆர், நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளையும், அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சாதனைகளையும் மக்களிடத்திலே முழுமையாகக் கொண்டு சேர்த்திடும் வகையில்.

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் ஆட்சியை மீண்டும் மலரச் செய்து, தமிழ் நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோடச் செய்திடும் வகையில், வருகின்ற டிச.27 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சியே மைதானத்தில்,ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம். இப்பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களை நெஞ்சில் சுமந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி மு. பழனிசாமி, ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *