கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அமைச்சர் S.P.வேலுமணி

கோவை, டிச-21

கோவை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மற்றும் அம்மா சேவா அறக்கட்டளை ,பெண்ணியம் அமைப்பு இணைந்து உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது . இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சாதனையாளர் விருது அரசு நலத்திட்ட உதவிகள் , நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அம்மா சேவா அறக்கட்டளை நிறுவனர் சோனாலிபிரதீப், அனந்த கல்பனா பவுண்டேசன் நிறுவனர் ஈஸ்வரன், சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை நிறுவனர் சரவணன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *