அரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம்

டெல்லி.அக்டோபர்.25

அரியானா சட்டமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி  அமைக்கும் என்று முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 அரியான சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 31  இடங்களும்  ஜன்நாயக் ஜனதா கட்சிக்கு10 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் 7  பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை என்ற போதும் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக  ஆட்சி அமைக்க  6 உறுப்பினர்களின் தேவை என்ற நிலையில் 4 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியானா லோகித் கட்சியின் கோபால் காந்தவும் பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில்  அரியானாவில்  ஆட்சி அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மனோகர் லால், டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே பி நாடா  உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் லால் கட்டார் அரியானவில் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ஜன்நாயக் ஜனதா தாலைவர் சர்தார் நிஷன்த் சிங் பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு  கோரியுள்ளதாக தெரிவித்தார் தேசிய செயற்குழு கூட்டத்தின் பின்னர் தங்களது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஹரியானா முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹூடாவும் பாஜகவை ஆதரிக்கப் போகும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹரியானா மக்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுப்பதாகவும் அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

அரியானா சட்டமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி  அமைக்கும் என்று முதலமைச்சர் மனோகர் லால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி.அக்டோபர்.25

 அரியான சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 31  இடங்களும்  ஜன்நாயக் ஜனதா கட்சிக்கு10 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் 7  பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை என்ற போதும் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக  ஆட்சி அமைக்க  6 உறுப்பினர்களின் தேவை என்ற நிலையில் 4 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியானா லோகித் கட்சியின் கோபால் காந்தவும் பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில்  அரியானாவில்  ஆட்சி அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மனோகர் லால், டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே பி நாடா  உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் லால் அரியானவில் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ஜன்நாயக் ஜனதா தாலைவர் சர்தார் நிஷன்த் சிங் பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு  கோரியுள்ளதாக தெரிவித்தார் தேசிய செயற்குழு கூட்டத்தின் பின்னர் தங்களது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஹரியானா முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹூடாவும் பாஜகவை ஆதரிக்கப் போகும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹரியானா மக்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுப்பதாகவும் அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *