கூட்டணி தொடர்பாக அதிமுக தலைவர்கள் திடீர் ஆலோசனை..!
வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, பிரசார உத்தி ஆகியன குறித்து அதிமுக தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினா். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை, டிச-21

அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பெயரை பாஜக தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தொடா்ந்து கூறி வருகிறாா். இதற்கு அமைச்சா்கள் சிலரும் காட்டமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில்
நேற்று இரவு 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் பெயரை அறிவிப்பது, முதல்வா் தோ்தல் பிரசாரத்தை தொடக்கியிருப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும், பிரச்சாரப் பயணம் குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.