ரஜினி பாஜக கட்டுப்பாட்டில் இல்லை.. அடித்து சத்தியம் செய்யும் எச்.ராஜா
பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை; எப்போதும் இருந்ததில்லை என பாஜக தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடி, டிச-19

இது தொடர்பாக காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை. எம்ஜிஆரின் விசுவாசியாகச் செயல்படாத கமல்ஹாசனுக்கு எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று கூறுவதற்கு உரிமை இல்லை. சினிமாவில் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தைக் கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது, ரஜினி வருவதில் எந்தத் தவறும் இல்லை.
ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். ரஜினி கட்சி தொடங்கினால் அவரது கட்சிக்கு திமுகவிலிருந்து ஏராளமானோர் சென்றுவிடுவர். இது திமுகவுக்கு பலவீனம். சமையல் எரிவாயு விலை ஏற்றம் தற்காலிகமானதுதான். அரசியல் நாகரிகமற்றவர் போல் ப.சிதம்பரம் செயல்படுகிறார்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.