இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது..!

இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

டெல்லி, டிச-19

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளது. தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 347 போ் கொரோனாவால் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,885 பேர் குணமடைந்து வீடு திரும்பு உள்ளதால் இதுவரை 95,50,712 போ் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *