வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் வாழ்த்து

சேலம்.அக்டோபர்.25

 விக்கிரவாண்டி, நாங்குநேரி,   இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44 ஆயிரத்து 924 வாக்குகள் கூடுதலாக பெற்று  வெற்றி பெற்றார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில்  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரைனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.  

இந்நிலையில் வெற்றி பெற்ற இரண்டு பேரும் இன்று சேலத்திலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த சந்திப்பின் போது சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உடனிருந்தார்.

 இதனிடையே புதிதாக தேர்நதெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் 29ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *