ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருட்டிய இந்திய அணி..!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 191 ரன்னுக்கு சுருண்டது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அடிலெய்டு, டிச-18

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பிங்க்-பாலில் விளையாடிய அனுபவம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு குறைவாக இருந்த போதிலும், அபாரமாக பந்து வீசினர். பும்ரா தொடக்க வீரர்களாக மேத்யூ வடே (8), ஜோ பேர்ன்ஸ் (8) ஆகியோரை எல்.பி.டபிள்யூ. மூலம் சாய்த்தார்.

அதன்பின் வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித்தை 1 ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின். அத்துடன் டிராவிஸ் ஹெட் (7), கேமரூன் க்ரீன் (11) ஆகியோரையும் வெளியேற்றினார். லாபஸ்சேன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட் 8 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 72.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 191 ரன்னில் சுருண்டது. டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *