புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் S.P.வேலுமணி

தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை, டிச-18

கோவை தொண்டாமுத்தூர் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கிறிஸ்தவ மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில்,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அதேபோல் தற்போதைய முதல்வரும் சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தவின் படி இதுவரை ரூ.8.1 கோடி நிதி பெற்று, நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் பயணம் சென்றுள்ளனர். 2020- 21ம் ஆண்டுகளில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்துவர்களுக்கு தமிழக முதல்வர் ஒரு கோடியே 70 லட்சம் நிதி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆதரவற்ற கிறிஸ்துவ பெண்களுக்கான நலச்சங்கம் இயங்கிவருகிறது. இந்தச் சங்கங்கள் வெளியே பெரும் நிதி உதவியில் இரண்டு மடங்காக மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இதில் ஆதரவற்ற பெண்களுக்கு ஆதார நிதியாக தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது

என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *