தினம் தினம் அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.37,808க்கு விற்பனை

சென்னை, டிச-18

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலரும் பலதரப்பட்ட முதலீடுகளை திரும்ப பெற்று தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37,808க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,726க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு உயர்ந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,708லிருந்து ரூ.16 உயர்ந்து ரூ.4,726ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.37,664லிருந்து ரூ.144 உயர்த்து ரூ.37,808க்கு விற்பனையாகிறது.

24 கேரட் சுத்த தங்கமானது ஒரு கிராம் ரூ.5,092 லிருந்து ரூ.18 உயர்ந்து ரூ.5,110ஆக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கமானது ரூ.40,736லிருந்து ரூ.144 உயர்ந்து ரூ.40,880ஆக உள்ளது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.40 லிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.71.50ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,400லிருந்து ரூ.100 உயர்ந்து ரூ.71,500 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *