நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு தினம்: அரசாணை வெளியீடு

சென்னை.அக்டோபர்.25

ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. 

மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கை எழுந்ததை அடுத்து 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

‘மதராஸ் மாகாணம்’ என்று  அழைக்கப்டுவதை மாற்றி ‘தமிழ்நாடு’ என பெயர் வைக்க கோரி சங்கரலிங்கனார் 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார். சங்கரலிங்கனாரின் கோரிக்கையை ஏற்று 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘மதராஸ் மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழக அரசு’ என பெயர் மாற்றி வரலாறு படைத்தது. அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *