ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்.. முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னுக்கு ஆல்அவுட்.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடிலெய்டு, டிச-18

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் அறிமுக வீரராக களம் கண்டாா். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சோ்த்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, 11 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *