சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.!
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை, டிச-16

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹியின் பதவிகாலம் வரும் டிசம்பர் 31- ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.