ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நாளை நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு, டிச-16

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக, அடிலெய்டு நகரில் நாளை தொடங்குகிறது.

மேலும், 11 பேர் கொண்ட இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் முதலாவது டெஸ்ட் இளஞ்சிவப்பு நிற பந்துடன் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண 30,000 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெறவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா உடற்தகுதி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று அதிகாலையில் அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் ரோஹித் சர்மா, அதன்பின் இந்திய அணியில் இணைந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோலி தலைமையில் ஆன மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஸ்வின் , ஊமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரிஷப் பந்துக்கு பதிலாக விருதிமான் சாஹா விக்கெட் கீப்பராக விளையாட உள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட சுப்மன் கில், கேஎல்ராகுல் ஆகியோர் அணியில் இடம்பெற வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *