அரபிக்கடலில் அச்சுறுத்தும்”கியார்” புயல்

டெல்லி.அக்டோபர்.25

அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக தீவிரம் கொண்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழைபெய்து வருகிறது.மேலும் கடந்த ஒரு வாரமாக அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடாக மாநிலங்களில் கன மழை பெய்தது.

இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள கியர் புயல் தீவிரமாக வலுப்பெற்று  ஓமனை நோக்கி நகரக்கூடும் என்றும் இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அடுத்த 24 மணி நேரத்தில் கியார் தீவிர புயலாக மாறும். இதை தொடர்ந்து அதி தீவிர புயலாக மாறக்கூடும்.  இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும்  பரவலாக  மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகாவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *