மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், செப்டம்பர்-6

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலைப்படி இரு அணைகளில் இருந்தும், 54 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை, 71 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் உபரி நீரும் 58 ஆயிரம் கன அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், அடுத்த மூன்று நாட்களுக்குள் மேட்டூர் அணை தன் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி 116.74 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117 கன அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *