இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,32,548 ஆக அதிகரித்துள்ளது. 387 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,44,096 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, டிச-16

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99.32 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 99,32,548 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 387 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,44,096 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,56,449 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,813 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,32,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *