ராதாபுரம் தேர்தல் முடிவை வெளியிட தடை நீடிப்பு:உச்ச நீதிமன்றம்

டெல்லி.அக்டோபர்.25

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க விதித்த தடை நவம்பர் 13- ஆம் தேதி வரை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராதாபுரம் தொகுதியில் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.


ஆனால், இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட அக்டோபர் 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்தனர். 

இந்நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை  நவம்பர் 13 ந்தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *