அமமுகவுக்கு குக்கர் சின்னம், ம.நீ.மக்கு டார்ச் சின்னம் ஒதுக்கீடு

தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி, டிச-14

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்பட சில மாநிலங்களுக்கு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன.
தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது.

  • சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்
  • அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
  • தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு
  • புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு
  • தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை
  • நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *