தமிழகத்தில் மேலும் 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டிச-14

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,78,081 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,203 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,909 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 6; தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 343 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,20,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,30,20,594 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 63,989 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 231 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 164.
  • தமிழகத்தில் தற்போது 10,039 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,83,390 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 679 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,16,605 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 462 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *