தேர்தலுக்கு தயாராகும் தமிழக பாஜக..தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைப்பு..!!
தமிழக பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, டிச-14

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலை, சசிகலா புஷ்பா, கனகசபாபதி, ராம ஸ்ரீநிவாசன், கார்வேந்தன், நாகராஜ், எஸ்.எஸ்.ஷா மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.