பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா..!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, டிச-13

கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்களும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேபி நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனாவுக்கான தொடக்க அறிகுறிகள் இருந்ததால் நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் உடல்நலத்துட உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரை படி நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார்.

ஜேபி நட்டா கடந்த 10-ம் தேதி மேற்குவங்க மாநிலத்திற்கு சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரசாரத்தின்போது அவர் பயணித்த வாகனம் மர்மநபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. ஜேபி நட்டா இம்மாத இறுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழகம் வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *