தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,883 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டிச-12

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

 • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,75,602 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,296 பேர் குணமடைந்துள்ளனர்.
 • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,883 ஆக உயர்ந்துள்ளது.
 • அரசு மருத்துவமனையில் 7; தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • சென்னையில் இன்று ஒரே நாளில் 307 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,19,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் இதுவரை 1,28,87,037 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • இன்று மட்டும் 72,122 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 228 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 161.
 • தமிழகத்தில் தற்போது 10,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,81,998 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 759 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,15,661 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 459 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
 • வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *