2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் குறித்து டிச.20ம் தேதி ஸ்டாலின் ஆலோசனை.. துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 20ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை, டிச-12

இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 20-12-2020, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி அளவில், மாவட்ட, மாநகர திமுக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்/பொறுப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.