கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை..மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, டிச-12

பண்டிகைகள் நெருங்கி வருவதால் ரெயில்களில் முன்பதிவு அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மேலும் 7 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 14-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் செல்கிறது. மறுமார்க்கமாக மைசூரில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்டரல் வந்து சேருகிறது.

திருநெல்வேலியில் இருந்து நாளை 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு இரண்டாம் நாள் இரவு 9.35 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக பிலாஸ்பூரில் இருந்து வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 3.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். திருநெல்வேலியில் இருந்து வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். மறுமார்க்கமாக தாதரில் இருந்து வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இதுதவிர மங்களூர் சென்ட்ரல்-மும்பை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *