கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டிச.16,17 தேதிகளில் முதல்வர் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 16 மற்றும் 17-ந்தேதிகளில் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை, டிச-12

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், வரும் 16 மற்றும் 17-ந்தேதிகளில் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். 3 மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *