அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. மு.க.ஸ்டாலின்

அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, டிச-12

ந‌டிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *