ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி, டிச-12

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களில் ரஜினிக்கு திரையுலகினரும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.