234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப்போட்டியிட தயார்.. பிரேமலதா அதிரடி..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, டிச-11

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த நிமிடம் வரையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது எனவும், வரும் ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கட்சிப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இது குறித்து முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.