மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதியா?.. சின்ன பரிசோதனைதான் என ஸ்டாலின் பேட்டி..!

எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது என உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது, மற்றபடி ஏதும் இல்லை என தெரிவித்தார்.

சென்னை, டிச-11

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் இன்று காலை நிவாரண உதவி வழங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென முக ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சில ஊடங்கங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வேகமாக பரவின. இதை உண்மை என்று நம்பிய திமுகவினர் அதிர்ச்சி அடைந்து விசாரிக்க தொடங்கினர். இதையடுத்து திமுக தலைமை இதை முற்றிலும் வதந்தி என மறுத்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது என உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது, மற்றபடி ஏதும் இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *