இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.84% ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்கிய நிலையில், 92.90 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, டிச-11

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 97,96,770 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 414 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,186 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,90,834 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 37,528 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,63,749 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.71% ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *