ஓட்டு போடுவது கூட தேர்தலில் பங்களிப்பு தான்.. மு.க.அழகிரி பதில்
மதுரை, டிச-10

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று கடந்த வாரம் பேட்டியளித்த மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;-
கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது”.
இவ்வாறு அவர் கூறினார்.