சித்ராவை கணவர் ஹேமந்த்தான் கொலை செய்து விட்டார்.. நல்லவர் என ஏமாந்துட்டோம் என தாயார் பரபரப்பு பேட்டி

தனது மகள் சித்ரா உயிரிழந்ததற்கு ஹேமந்த்தே கரணம் என சித்ராவின் தாயார் புகார் கூறியுள்ளார்.

சென்னை, டிச-10

‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா்சித்ரா. சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினார்.

சித்ரா, படப்பிடிப்பு முடிந்து புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தங்கும் விடுதிக்கு வந்துள்ளாா். அப்போது குளிக்கச் செல்வதாக சித்ரா கூறியுள்ளாா். உடனே ஹேமந்த் அந்த அறையை விட்டு வெளியே வந்து நின்றதாக கூறப்படுகிறத். ஆனால் வெகுநேரமாகியும் சித்ரா அறைக் கதவை திறக்காததால் ஹேமந்துக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவா், ஹோட்டல் ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். ஹோட்டல் ஊழியா் கணேசனும், ஹேமந்தும் மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து, அறைக்குள் சென்றனா். அப்போது அங்கு சித்ரா, சேலையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே ஹோட்டல் நிா்வாகத்தினா், நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். அதேவேளையில் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சித்ராவின் பிரேதப் பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது மகள் சித்ரா உயிரிழந்ததற்கு ஹேமந்த்தே கரணம் என சித்ராவின் தாயார் புகார் கூறியுள்ளார்.

ஹேம்நாத் தனது மகளை கொலை செய்துவிட்டார், அவனை கைது செய்ய வேண்டும் என நடிகை சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். எனது மகள் சித்ரா தைரியமானவர், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என அவரது தாயார் விஜயா கூறினார். சித்ராவை திருமணம் செய்து தரவிட்டால் நான் செத்துவிடுவேன் என ஹேம்நாத் கூறியதாகவும் கூறினார். ஹேம்நாத் நல்லவர் என ஏமாந்துவிட்டோம் என சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *