11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..

சென்னையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, டிச-10

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் இலவச மிதிவண்டிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட உள்ளது.

2020 – 2021ஆம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 9 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா, வளர்மதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *