பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, டிச-9

டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். கல்லூரி படிப்புக்கு பின்னர், 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் “சட்டம் சொல்வது என்ன” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது தொலைக்காட்சி பயணத்தை தொடர்ந்தவர், நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொலைக்காட்சியில் பிரபலமடைந்தவர். பின்னர், வேந்தர் தொலைக்காட்சி, ஜீ தமிழ், சன், விஜய் என சித்ராவின் தொகுப்பாளினி நீண்டது. சன் தொலைக்காட்சியில் “சின்னப் பாப்பா பெரிய பாப்பா” தொடரில் நடித்து சின்னத்திரை நடிகையாக பிரபலமான சித்ரா, விஜய் தொலைக்காட்சி பிரபல தொடரான ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” – இல் கதிருக்கு இணையாக முல்லையாக நடித்து மக்கள் மனங்களில் முல்லையாக மனம் வீசியவர் சித்ரா.

இந்நிலையில், அவரது திடீர் தற்கொலை ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *