சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டிச-8

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் உறுதி செய்து இருக்கிறார்கள். மேலும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *