தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,92,788,-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, டிச-8

  • தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,70,378 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,330 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,822 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 7; தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 333 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,18,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,26,05,289 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 65,186 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 228 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • அரசு மையங்கள் 67; தனியார் மையங்கள் 161.
  • தமிழகத்தில் தற்போது 10,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,78,996 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 753 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,13,758 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 483 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *