கல்கி சாமியார் & குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு
அக்டோபர்-24
கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், கல்கி சாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கல்கி சாமியாரின் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவினர் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்துகள் குறித்த ஆவணங்கள், வெளிநாட்டு பணம், இந்திய ரூபாய் என பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வருமான வரி புலனாய்வு பிரிவினர் அனுப்பி வைத்திருந்தனர்.
இதில் ஹவாலா வழியில் 85 கோடி ரூபாய் முதலீடு செய்தது, 20 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா உள்ளிட்ட குடும்பத்தினர் மீது பெமா சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.