சோனியா காந்தி நாளை பிறந்தநாள் கொண்டாட மாட்டார் என அறிவிப்பு!!

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, டிச-8

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை(டிச.9) தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நகரங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாசரா கூறுகையில், ‘நாடு முழுவதும் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு ஆதரவு ெதரிவிக்கும் வகையில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு தனது பிறந்த நாளை (டிச. 9) கொண்டாட மாட்டார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *