நாகையில் ‘நிவர்’, ‘புரெவி’ புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார், அமைச்சர் S.P.வேலுமணி..!

நாகை மாவட்டத்தில் ‘நிவர்’, ‘புரெவி’ புயல் பாதிப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

நாகை, டிச-8

நாகை மாவட்டம் இறையான்குளம் பகுதியில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார். உடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடனிருந்தார்.

இதேபோல், நாகை மாவட்டத்தில் ‘நிவர்’, ‘புரெவி’புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், நம்பியார் நகர் பகுதியில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

‘நிவர்’, ‘புரெவி’ புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் சி.முனியநாதன், பேரூராட்சிகள் துறை இயக்குநர் சு.பழனிசாமி, ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் ரா.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகை நகராட்சியில் உள்ள பணியாளர் பற்றாக்குறை தொடர்பாக, எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் கோரிக்கை ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, “நாகை நகராட்சிக்கு உடனடியாக 100 புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

முன்னதாக, புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, சி.விஜய பாஸ்கர் ஆகியோர், அரசின் நிவார ணப் பொருட்களை வழங்கினர். பின்னர், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருங் கண்ணி, மகிழி, இறையான்குடி மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆய்மூர் ஆகிய கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *