பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!.. ஸ்டாலின் ட்வீட்

விவசாயிகளுக்காக நடைபெறும் பாரத் பந்த் வெல்லட்டும். மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை, டிச-8

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது!

உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!

உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!

#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *