டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் போலீஸ் வைத்துள்ளது.. ஆம் ஆத்மி ட்விட்..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி போலீஸ் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, டிச-8

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவாலை பார்க்கச் சென்ற எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.