தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.37,864க்கு விற்பனை..!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,864-க்கு விற்பனையாகிறது.

சென்னை, டிச-8

தங்கம் விலை கடந்த சில நாட்களாக விலை உயர்ந்தபடியே இருந்து வருகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் சவரனுக்கு மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடியாக உயர்ந்தது.

சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.776 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 864-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 733 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,900 உயர்ந்து ரூ.69 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கிறது.

இன்று விலை உயர்வு காரணமாக தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது நகை வாங்க நினைப்போரை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *