தமிழகத்தில் அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை, அக்டோபர்-24

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை கீழடியில் 5 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பழமையான மற்றும் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் 5 கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், 6 ஆவது கட்ட அகழ்வாய்வுப் பணிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *