அலைக்கற்றை திருடனே அடக்குடா உன் நாவை.. ஆ.ராசாவை “குத்தீட்டி”யால் குத்திய அதிமுக!

அலைக்கற்றை திருடனே அடக்குடா உன் நாவை என்கிற தலைப்பில் ’இனியும் உன் நாக்கு எல்லை தாண்டுமானால் ஆண்டிமுத்து மகனே இனி உனக்கு அத்தியாயங்கள் ஆரம்பமாகும். ஜாக்கிரதை’’ என ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு நமது அம்மா நாளிதழில் குத்தீட்டி பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, டிச-7

இதுகுறித்து அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

‘’அடம், மானம்கெட்ட ராசா… உன்னைப் போலவும், உன் தலைவனைப் போலவும் பிறரது கால் கழுவி பிழைத்தவர்கள் இந்திய அரசியலிலேயே கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று முப்பாத்தம்மன் கோயில் சுண்டலை விநியோகம் செய்வது போல தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய அலைக்கற்றை வைரத்தை நிலக்கரி விலைக்கு விற்று ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் கோடியை கொள்ளையடித்தவன் நீ. நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையே பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாக்களுக்கும், சீனாவுக்கு ஆயுத கொள்முதல் செய்து கொடுக்கும் டெலிநார் எனப்படும் டெலி நார்வே என்னும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் இந்தியாவின் அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு விற்று பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து கையும், களவுமாக மாட்டிக் கொண்ட களவாணி பய நீ.

பாராளுமன்ற கூட்டுக்குழு, மத்திய கணக்கு தணிக்கைத்துறை, சி.பி.ஐ. எனப்படும் இந்திய தேசத்தின் முதன்மை விசாரணை அமைப்புகள் அனைத்தும் உன்னை திருடன் என்று உறுதி செய்தன. உனக்கு கைவிலங்கு பூட்ட உத்தரவிட்டது அன்றைய காங்கிரஸ் ஆட்சி தான். உன்னை மட்டுமல்ல, கருணாநிதி பேரன், கேபிள் திருடன் தயாநிதி மாறனையும், மத்திய அமைச்சரவையில் இருந்து ஊழலுக்காக பிடரியை பிடித்து வெளியே தள்ளியதும் அன்றைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான். அதுவும் காங்கிரஸ் தான்.

உனது ஸ்பெக்ட்ரம் கொள்ளையை வைத்து கருணாநிதி குடும்பத்தையே மண்டியிட செய்து அறிவாலயத்தின் தரைதளத்தில் தி.மு.க.வோடு தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, முதல் தளத்தில் சி.பி.ஐ.யை வைத்து கருணாநிதி பொண்டாட்டி தயாளுவையும், அவரது மகள் கனிமொழியையும் விசாரணை என்ற பெயரில் ட்ரில் எடுத்ததோடு, திமுகவை மிரட்டி 63 தொகுதிகளை பறித்து அதனை இத்தாலி சோனியாவின் வீட்டுக்கே கேடி பேரன்களை வைத்து டோர் டெலிவரி செய்ய வைத்ததும் அதே காங்கிரஸ் கட்சி தான்.

இவை யாவிற்கும் மேலாக அலைக்கற்றை ஊழலை வைத்தே ஈழத்து இன அழிப்பை நடத்தி முடித்ததும் ரத்த வெறியன் ராஜபக்சேவும், இத்தாலி காங்கிரசும் தான். அப்போது அந்த இன அழிப்பிற்கு துணை போனது மட்டுமின்றி ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று தொடை நடுங்கி கோழையாக சட்டமன்றத்தில் நின்று கொண்டே புலம்பியதோடு, புலன்களை பொத்திக் கொண்டு நின்றதும் அப்போதைய முதலமைச்சர் அடிமை கருணாநிதி தான். இப்படி நீ களவாடியதை கண்டுபிடித்தது காங்கிரஸ். உன்னையும், உனது களவாணி பார்ட்னர் கனிமொழியையும் கூடவே புரோக்கர் நீரா ராடியாவையும் கைவிலங்கு பூட்டி டெல்லி திகார் சிறையில் அடைத்ததும் காங்கிரஸ் ஆட்சி தான்.

சூடு சொரணையற்ற தி.மு.க. ஆனால், அந்த காங்கிரசோடு இன்றுவரை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களது காலை நக்கிப் பிழைத்தது சூடு சொரணையற்ற திமுகதானே. இதற்கு எதிராக மானங்கெட்ட ராசாவுக்கு கோபம் வர மாட்டேங்குதே எதற்காக? உன்னை எந்த நீதிமன்றமும் நிரபராதி என்று விடுவிக்கவில்லை. உரிய வகையில் உன்னை குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்க தவறி விட்டார்கள் என்று தான் உன் வழக்கை விசாரித்த நீதிபதி கருத்து சொல்லியிருக்கிறார்.

இப்போதும் உன் வழக்கு மேல் முறையீட்டில் இருக்கிறது. நீ தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளி தான். நீ மாட்டிக் கொள்ளாமல் திருடியது என்பதற்காக நீ நிரபராதி என்பதாகாது. அலைக்கற்றை பணம் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் எப்படியெல்லாம் பிரிக்கப்பட்டது? உனக்கு கையாள் வேலை பார்த்த பத்திரிகையாளர்கள் தொடங்கி கருணாநிதிக்கு வண்டி தள்ளிய ஆட்கள், பாதுகாப்பு அதிகாரிகள் வரை கருணாநிதியின் மொத்த குடும்பத்திற்குமாக ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கோடிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டது, ஆங்காங்கு பதுக்கப்பட்டது என்பதை இந்த உலகமே அறியும். உலகமே காறித் துப்பியது.

நீயும், உன் களவாணி பார்ட்னர் கனிமொழியும் அடித்து வந்த கொள்ளை பணத்தை பிரித்துக் கொண்ட விதத்தை உலகமே கண்டு காறித் துப்பியது. அதிலும் குறிப்பாக கருணாநிதி பெயரில் தொலைக்காட்சி தொடங்க பால்வாவிடமிருந்து 214 கோடி ரூபாயை அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக லஞ்சமாக வாங்கி விட்டு சி.பி.ஐ. வந்து கதவு தட்டியதும் நாங்கள் வாங்கியது கடன் தான் என்று கதை அளந்ததும், வட்டியோடு அதனை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று பித்தலாட்டம் செய்ததும் தொடங்காத தொலைக்காட்சிக்கு இந்தியா சிமெண்ட் சீனிவாசன் விளம்பர முன்பணம் கொடுத்தார் என்று பீலா விட்டதும், ராசாத்தி வீட்டு வேலைக்காரன் சரவணன் என்பவரது பெயரிலே டாடாவின் 700 கோடி மதிப்புடைய ஓல்டாஸ் கட்டடத்தை பட்டா போட்டதும் நாடறிந்த கதை அல்லவா?

இவ்வளவு ஏன்? நீ கொள்ளையடித்த விவரத்தையும், இன்றைய துண்டுச்சீட்டு ஸ்டாலின் தொழிலதிபர் பால்வாவை சந்தித்த செய்திகளையும் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டு வந்த மறுநாளே பெரம்பலூர் சாதிக்கை கொன்று போட்டது நீ தான் என்று இன்று வரை உங்கள் கூட்டணியில் இருக்கிற வைகோ, ஊடகங்களை கூட்டி வைத்து தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக திகில், பகீர் விவரங்களை வெளியிட்டாரே… அட மானம்கெட்ட ராசா அதற்காக நீ அந்த வைகோவுக்கு எதிராக வழக்கு போட்டாயா? இல்லை, அந்த வைகோவை திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என்று உப்பு உரைப்பு போட்டு சாப்பிடுபவன் நீ என்றால் அதனை சொல்லி இருக்க வேண்டாமா?

கோழைகளின் கூடாரம். அதனால், எங்கள் புரட்சித்தலைவியை பற்றி பேசுவதற்கு மானம்கெட்ட ராசாவுக்கு யோக்கியதை கிடையாது? எங்கள் அம்மா நூற்றி முப்பது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து தான் உழைத்து சேர்த்ததையெல்லாம் இந்த தேசத்திற்கே உரிமையாக்கி விட்டு சென்ற தெய்வத்தின் திருவுருவம். அறுபதுகளிலேயே போயஸ் தோட்டத்தில் மாளிகை கட்டி வாழ்ந்தவர். இந்திய தேசத்திற்கு அண்டை நாட்டோடு போர் வந்து இன்னல் என்றதும், தான் அணிந்திருந்த கோடான கோடி தங்கம், வைர நகைகளை எல்லாம் புன்னகையோடு இந்திய குடியரசு தலைவரிடம் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர். உன் தலைவனை போல ரயிலுக்கு டிக்கெட் எடுக்கவும் வக்கில்லாத வாழ்க்கையை தொடங்கியவர் அல்ல. கோவை செங்காநல்லூரில் குடியிருந்த வீட்டுக்கும் வாடகை கொடுக்க முடியாமலும், மளிகை கடைக்கு பாக்கி வைத்து விட்டு அங்கிருந்து இரவோடு இரவாக தலைமறைவாகி ஓடி வந்த திருடர் குல திலகம் அல்ல.

நீரில், நிலத்தில், காற்றில், நெருப்பில், ஆகாயத்தில் என்று பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்து அந்த ஊழல்களை மறைக்க அன்றைய மாமியார் இந்திரா தொடங்கி இன்றைய மருமகள் இத்தாலி சோனியா வரை பாதபூஜை நடத்தி தன்னை பாதுகாத்துக் கொண்ட கோழை அல்ல. தன்னை பார்க்க சோனியா மறுக்கிறார் என்றதும் குடும்பத்தையே கூட்டிக் கொண்டுபோய் சென்னை விமான நிலையத்தில் சோனியா காலில் விழுந்து அழுத ஈன பிழைப்பு எங்களிடம் இல்லை.

இனத்தை அழித்தவன் பங்களாவுக்கு சென்று பந்தியில் உட்கார்ந்து தொந்தியை நிரப்பிக் கொண்டு பல்லிளித்த வண்ணம் பரிசு பெட்டி வாங்கி வந்த பாதகர்கள் நாங்கள் அல்ல. விஞ்ஞான குற்றவாளிகள் என்று நீதியரசர் சர்க்காரியாவிடம் தரச்சான்று பெற்ற கொள்ளை கூட்டம் தி.மு.க.. கூவத்திலே முதலை பிடிக்கிறோம் என்று அரசாங்கத்தின் கைமுதலையே களவாடிய கட்சி தி.மு.க.. பூச்சி மருந்து பேரம், உர பேரம், கோதுமை பேரம், வீராணம் குழாய் ஊழல் என்றெல்லாம் லஞ்ச லாவண்யங்களில் தங்கமடல் வென்ற சம்பல் கொள்ளைக்காரர்கள் தி.மு.க.வினரே. மானம் மரியாதை கப்பலேறும்.

ஊழலுக்காகவும், நாட்டின் ரகசியங்களை அண்டை நாட்டுக்கு கசியவிட்ட தேசவிரோத குற்றச்சாட்டுக்கும் இரண்டு முறை குடியரசு தலைவராலே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். வீராணத்திலே ஊழல் செய்து திருக்கழுக்குன்றம் சத்திய நாராயணா சகோதரர்களை சாகடித்த சண்டாளர்கள் தி.மு.க.வினர். காட்டிக் கொடுப்பதும், வேண்டுமானால் கூட்டிக் கொடுப்பதும் தி.மு.க.வுக்கே கைவந்த கலை. ஆனால் பள்ளியில் பந்தியிட்டு, ஆலயத்தில் அன்னமிட்டு வீடுதோறும் விலையில்லா அரிசி வழங்கி ஊர் பசி போக்கி மக்களின் உள்ளமெல்லாம் நிறைந்த கட்சி அண்ணா தி.மு.க.. மீத்தேனுக்கு கையெழுத்து போட்டு படுகை விவசாய பகுதியை பணப்பெட்டிக்கு விற்ற துரோக கும்பல் தி.மு.க.. ஆனால் அந்த மீத்தேனையும், கெயில், ஹைட்ரோ கார்பனையும் துரத்தியடித்து டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக பிரகடனம் செய்த செப்புக் கலக்காத சொக்கத் தங்கம் அ.இ.அ.தி.மு.க.

அதனால், பெரம்பலூர் பக்கமாக பிச்சை எடுத்து பிழைத்த ஆண்டிமுத்து ராசாவே நாவை அடக்கிப் பேசு. இனியும் லட்சுமண ரேகையை மீறி உன் நாக்கு எல்லை தாண்டுமானால் உன் மானம் மரியாதை கப்பலேற்றப்படும். நீ நாலாந்தரமாய் பேசினால் அதற்கு நாற்பதாம் தரமாய் பதிலடி தருவதற்கு அண்ணா தி.மு.க.வில் ஒன்றும் ஆள் பஞ்சம் கிடையாது. எச்சரிக்கை, எச்சரிக்கை, இது இறுதி எச்சரிக்கை. இனியும் உன் நாக்கு எல்லை தாண்டுமானால் ஆண்டிமுத்து மகனே இனி உனக்கு அத்தியாயங்கள் ஆரம்பமாகும். ஜாக்கிரதை’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *