நான் சங்கியா? பி டீம்-ஆ?.. கொந்தளித்த கமல்ஹாசன்

அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலை போற்றுவது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

சென்னை, டிச-7

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியதிலிருந்து அவரை பாஜகவின் பி டீம், வாக்குகளைப் பிரிப்பதற்காக இயங்குகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரவேற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷன் விவகாரத்தில் கமல்ஹாசன் திடீரென ஆவேசப்பட்டு பேட்டி அளித்தார்.

சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய கமல்ஹாசன், சூரப்பா மிகவும் நேர்மையானவர் எனவும், சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோவையடுத்து கமல்ஹாசன் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கமல்ஹாசனின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கண்டனக்குரலும் எழுந்தது. மேலும், அவர் பாஜவின் பி டீம் என்றும் சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்கத் தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *