பெங்களூருவில் அண்ணனை சந்தித்து ஆசி பெற்றார், ரஜினிகாந்த்
பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து, தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் குறித்து தெரிவித்த ரஜினி, அண்ணனிடம் ஆசி பெற்றார்.
பெங்களூரு, டிச-7

ஜனவரியில் புதுக் கட்சியை தொடங்கி, சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கப் போவதாக நடிகா் ரஜினிகாந்த் கடந்த வாரம் வியாழக்கிழமை அறிவித்தாா். புதிய கட்சி தொடங்கவிருக்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பதாகவும் ரஜினி அறிவித்திருந்தார். ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினி, சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், ரஜினி பெங்களூரு சென்று, தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார்.
