விவாதத்திற்கு நான் தயார்.. ஆ.ராசாவை பிரித்து மேய்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

‘‘ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதலமைச்சர் ஏன் வரவேண்டும். நான் வருகிறேன். திமுக தயாரா?’’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர், டிச-7

சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்” என விமர்சித்துப் பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். “2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

இதன் பின்னர் அதிமுகவிலிருந்து பதில் வராத நிலையில் சேலத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசினார். நேருக்கு நேர் விவாதிக்க ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை. அப்படி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ஆண்மை இருப்பது உண்மை என்றால் ஆ.ராசாவிடம் தேதி குறியுங்கள்; வரத்தயார் என ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆ.ராசாவிடன் விவகாதம் நடத்த நான் தயார் என கூறியுள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், திமுகவை மிககடுமையாக சாடினார். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கையாளாக இருக்கக்கூடிய ஊழலில் நாயகன் ராஜாவை வைத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி யாரையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் கேவலமாக விமர்சனம் செய்யக்கூடிய போக்கை வன்மையாக கண்டிக்கிறேன், அந்த உணர்வோடு தான் நான் இப்போது பத்திரிக்கையாளர்களாகிய உங்களை அழைத்திருக்கிறேன். தமிழகத்தில் கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், ஸ்டாலின் பெரிதாக என்ன செய்துவிட்டார், என ஸ்டாலினை கொச்சையான வார்த்தைகளால் தாக்கினார்.பேச்சை தொடர்ந்த அவர், திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொலை பட்டியல் சொத்துப் பட்டியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

சாதிக்பாட்சா சம்பவத்தில் என்ன நடந்தது, இப்போது சாதிக் பாட்சாவின் மனைவியையும் ஆள் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள், திமுக செய்த டார்ச்சரால் தான் சாதிக்பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டனர். என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்ததனால்தான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்க கூடியவர், ரஜினிகாந்த் அரசியலில் பாஜக பின்னணியில் இருந்தால் என்ன.? முன்னிலையில் இருந்தால் என்ன.? திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார். மொத்தத்தில் அதிமுகவும், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியும் ஒட்டுமொத்தமாக திமுகவை கும்மி அடிக்க போகிறோம். திமுகவை படுதோல்வி அடையச் செய்வதே அதிமுகவின் ஒரே நோக்கம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *