சட்டப்பேரவையில் அ.தி.மு.க. பலம் உயர்வு!!!

சென்னை, அக்டோபர்-24

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம் 124 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இடைத்தேர்தலுக்கு முன், சட்டசபையில் ஆளும் அதிமுகவின் பலம் 122 ஆகவும், திமுகவின் பலம் 101 ஆகவும், காங்கிரஸ் கட்சியின் பலம் 8 ஆகவும் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஆர்கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்ற தினகரன், சபாநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

இதில், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு காரணமாக அக்கட்சியின் பலம் 100 ஆகவும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரசின் பலம் 7 ஆகவும் குறைந்தது.

இந்நிலையில், காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், இரண்டு தொகுதிகளையும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிமுக கைப்பற்றியது. இதனால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் 124 ஆக அதிகரித்துள்ளது.

பேரவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை – 234

அதிமுக – 124

திமுக – 100

காங்கிரஸ் – 7

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1

சுயேட்சை – 1 (டிடிவி தினகரன்)

சபாநாயகர் – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *