ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி.. பகீர் கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி

தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கும் இடையே போட்டி நிலவும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-3

“ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டரில், “ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விகள் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும்; பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *